Monday, April 16, 2007

சிறுபான்மை, பெரும்பான்மை, மனப்பான்மை

சமீபத்தில் உத்திரப் பிரதேச நீதிமன்றம் முஸ்லீம்கள் 18.5% அந்த மாநிலத்தில் உள்ளதால் அவர்கள் சிறுபான்மையினர் அல்ல என்று ஒரு அதிர்ச்சி வைத்திய தீர்ப்பை அளித்தது. வழக்கம் போல, முஸ்லீம் ஓட்டு வங்கியைக் குறிவைத்திருந்த முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி மற்றும் காங்கிரசுக்கு இது வயிற்றில் புளியைக் கரைத்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடுக்கப் போவதாக அவசர அவசரமாக அறிப்பு செய்தது எந்த முஸ்லீம் அமைப்பும் அல்ல, முல்லா முலாயமின் கட்சி! என்ன அக்கறை பாருங்கள்.

அதே நாளில் தெற்கே தமிழகத்தில் முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆவன செய்யப் படும் என்று சட்டசபையில் தன் கரகர குரலில் கருணாநிதி அறிவிக்கிறார். ஏற்கனவே தமிழகத்தின் 69% அநியாய இட ஒதுக்கீட்டுக் கொள்கை உச்சநீதி மன்றத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பு! இட ஒதுக்கீட்டுக்குக் காரணம் - சிறுபான்மையினர்!

இந்த "சிறுபான்மை" என்ற லேபிள் எப்படி உண்மை நிலையை மறைத்து, திரித்து அரசியல்வாதிகள் தங்கள் ஓட்டுவங்கியை விருத்தி செய்து மக்களை ஏமாற்றவே பயன்படுகிறது என்று பார்ப்போம்.

சிறுபான்மை என்ற சொல் இந்தியா முழுதும் மொத்தமாக மத அளவில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பவர்களைக் குறிப்பதற்காகவே பொதுவாகப் பயன்படுத்தப் படுகிறது. இந்த லேபிளால் அழைக்கப் படுபவர்கள் பாவப் பட்டவர்கள், கஷ்டப் படுபவர்கள், அவர்களை முன்னேற்ற பிரத்தியேக "சிறுபான்மை கமிஷன்" உண்டு என்ற கருத்துக்கள் ஆணி போல அறையப் பட்டிருக்கின்றன. ஆனால் இந்தக் குழுவில் வரும் சீக்கியர்கள் தான் இந்தியாவிலேய சராசரி தனிமனித வருமானம் (average per capita income) மிக அதிகமாக உள்ள சமூகக் குழு! எண்ணிக்கையில் மிகக் குறைவாக இருந்தும் செல்வத்தைப் பெருக்கும் பார்சிகள், ஜெயின்கள் ஆகிய குழுக்கள் தங்களுக்கு என்று எந்த சிறுபான்மை சலுகைகளையும் வேண்டிக் கேட்காதவை, இவற்றை பட்டியலில் இருந்து எடுத்து விட்டாலும் இந்த சமூகத்தினர் கண்டிப்பாக தெருவில் வந்து சண்டையிடப் போவதில்லை.

இன்னொரு சிறுபான்மைக் குழுவான கிறித்தவர்கள் கல்வி, வேலை மற்றும் பல மனிதவளக் குறியீடுகளில் முன் நிற்கின்றனர். பிரிட்டிஷாரால் இந்த நாட்டு மக்களிடமிருந்து பிடுங்கப் பட்ட நிலபுலன்கள், நிறுவனங்கள் போன்ற சொத்துக்கள் பலவற்றையும் சுதந்திரத்திற்குப் பின் ஜம்மென்று அனுபவிக்கும் உரிமையையும் பெற்று, இந்திய தேசம் வழங்கும் மத சுதந்திர உரிமைகளையும் அருமையாக துஷ்பிரயோகம் செய்து வெளிநாட்டு மிஷநரி நன்கொடைகளோடு வளப்ப வாழ்வு வாழும் வாய்ப்புகள் பல படைத்த சமூகக் குழு இது.

சச்சார் கமிட்டி அறிக்கைகள் தொடர்பான சர்ச்சைகளுக்குள் இறங்காமல் பார்த்தால், சராசரியாக முஸ்லீம்கள் பல குறியீடுகளில் இந்துக்களை விட அதிகமாகவும் (சராசரி வருமானம்), சிலவற்றில் சமமாகவும் (சராசரி கல்வியறிவு), சிலவற்றில் இந்துக்களை விடக் குறைவாகவும் (சராசரி பெண்கல்வி) வருகிறார்கள்.

மொத்தத்தில் பெரும்பான்மை என்ற பாரத்தை, பொறுப்புணர்வை, சிலுவையை சுமக்க வைக்கப் பட்டுள்ள இந்துக்கள் தான் இந்தியாவில் சராசரியாக எல்லா வளர்ச்சிக் குறியீடுகளிலும் பின் தங்கியுள்ளனர். அப்படியானால் யாருக்கு சலுகைகள் தேவை? யாருக்கு பொருளாதார உதவிகள் தேவை? ஊன்றுகோல்கள் ஓடி விளையாடுபவருக்குத் தேவையா தத்தித் தள்ளாடுபவருக்குத் தேவையா? "சிறுபான்மை" என்று அழைக்கப் படும் இந்த மதக் குழுக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சலுகைகள், இடஒதுக்கீடு வழங்குமானால் அது ஏற்கனவே பின்தங்கியுள்ள எல்லா சாதிகளையும் சேர்ந்த இந்துக்களிடம் இருந்து அவர்கள் வாய்ப்புகளைப் பறிப்பதாகத் தான் இருக்கும். இது ஒருவகையில் அநீதி.

ஏற்கனவே மத ரீதியான சிறுபான்மை என்ற இந்த சலுகையைப் பயன்படுத்தி கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் இந்த சமூகக் குழுக்கள் அரசு உதவியில் அல்லது அங்கீகாரத்தில் ஓடும் தங்கள் நிறுவனங்களை ஏதோ தங்கள் குழுக்களின் தனிச் சொத்து போல பாவித்து வருகின்றன. இவற்றின் கல்வி வாய்ப்புக்களை அரசு சமூகம் முழுமைக்கும் விரிவாக்க முயலும் போதெல்லாம் குய்யோ முறையோ என்று கூப்பாடு போடுகின்றன. இவற்றுக்கு முனைந்து அங்கீகாரம் வழங்கும் அரசு இந்துக்கள் (தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினராக இருந்தால் கூட) கல்வி நிறுவனங்கள் நடத்த முற்படுகையில் ஆயிரம் கேள்விகள் கேட்கப் பட்டு, முட்டுக் கட்டைகள் போடப் படுகின்றன. இதையும் மீறி பல இந்து கல்வி நிறுவங்கள் பெருமளவில் வளர்ந்திருப்பது ஒரு சாதனை தான்.

வளர்ச்சியை விடுங்கள், காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களின் வாழ்வுரிமையே கேள்விக்குரியதாக உள்ளது. 1980களில் நடந்த திட்டமிட்ட இன அழிப்பில் காஷ்மீர் இந்துக்கள் தங்கள் சொந்த பூமியைவிட்டுத் துரத்தப் பட்டு தம் நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. திரிபுரா, மேகாலயா, மிசோரம் மாநிலங்களில் கிறித்தவர்களாக மாறிய பழங்குடியினர் சிறுபான்மையினராக உள்ள இந்துப் பழங்குடியினரை இதே ரீதியில் இன அழிப்பு செய்து வருகின்றனர். இத்தகைய இந்து சிறுபான்மையினரின் அவலத்தை எடுத்துரைத்தால் ஏளனம் தான் பதிலாகக் கிடைக்கிறது. என்ன கொடுமை!

மதம் தவிர, மற்ற பல வகையிலும், ஒவ்வொரு பிரதேசங்களிலும் மொழி, சாதி மற்றும் வேறு பல காரணங்களால் சிறுபான்மையினராகி அதன் காரணமாகவே அல்லலுறும் எத்தனையோ சமூகக் குழுக்கள் பற்றி தேசிய அளவில் பெரிய அக்கறை இல்லை. சொல்லப் போனால் சிறுபான்மையினர் பற்றிய நமது கண்ணோட்டம் ஒவ்வொரு மாநில அளவிலும், பிரதேச அளவிலும் இருந்து தானே தொடங்க வேண்டும்? பிராமணர்கள் தமிழகத்தில் சிறுபான்மை சாதியினர், அஸ்ஸாமில் வாழும் பீகாரிகள், மணிப்பூரில் வாழும் வங்காளிகள், திரிபுராவில் ஜமாத்தியாக்கள் இவர்கள் எல்லாரும் சிறுபான்மையினர் மட்டுமல்ல, அந்தந்தப் பகுதிகளில் உள்ள ஆதிக்க சக்திகளான பெரும்பான்மையினரால் ஏறி மிதித்து நசுக்கப் படுபவர்கள்! ஆனால் சிறுபான்மையினருக்கான எந்த உரிமைகளும், சலுகைகளும் ஏன் இவர்களுக்கு கிடைக்கவில்லை? யோசிக்க வேண்டிய விஷயம் இது.

பாரதம் போன்ற பல்வேறு வகைப்பட்ட சமூகச் சூழல்கள் வலைப் பின்னலாக நிலவும் நாட்டில், சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பொதுப் படுத்துதலான குழு அடையாளங்கள் பெரும் குழப்பத்தையும், மயக்கத்தையும் தான் ஏற்படுத்துகின்றன. ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் "பெரும்பான்மை மனப்பான்மை" (majoritarion mindset) என்பது இப்படி அடையாளம் காணப்படும் இந்துக்களிடம் இருக்கிறதா? பல்வேறு வகையில் பிளவு பட்டுக் கிடக்கும், சகிப்புத் தன்மையின் இலக்கணமாகத் திகழும் இந்து சமுதாயம் பற்றி இப்படிச் சொல்வது குரூர நகைச்சுவை. காஷ்மீரில் வாழ்வுரிமை இழந்தவர்கள் இந்தப் "பெரும்பான்மை" மக்கள்!

"சிறுபான்மை மனப்பான்மை" (minority mindset) என்பது பொதுவாகக் குறைவாக இருக்கும் மக்கள் குழு எப்போதும் பாதுகாப்பின்மை பற்றிய உணர்வோடு வாழ்வது என்பதைக் குறிக்கும். ஆனால் இந்தியாவில் இந்தப் பெயரால் தங்களை அழைத்துக் கொள்ளும் கிறித்தவ, இஸ்லாமியக் குழுக்கள் தான் தாங்கள் ஓரளவு அதிகம் வாழும் இடங்கள் பலவற்றில் அராஜக, ஆதிக்க சக்திகளாக இருக்கின்றன. இத்தகைய இடங்களில் தங்களது குழு ஒற்றுமை காரணமாக பிளவு பட்டிருக்கும் இந்து சமுதாயம் மீது அதிகாரமும் செலுத்துகின்றன. அதே சமயம் தேசிய அளவில் "சிறுபான்மை" என்று கூக்குரல் இட்டு சலுகைகள் பெறவும் துடிக்கின்றன!

இந்த பொத்தாம் பொதுவான "மனப்பான்மை" வாதங்கள் பாரதத்தின் சமூக சூழலில் பொருள் இழக்கின்றன, நேர்மாறாகின்றன, குழம்பிப் போகின்றன.

நம் நாட்டிற்கு உண்மையான தேவை தனிமனித உரிமைகள் தான், எந்த குழுவுக்கான பிரத்தியேக உரிமைகளும் அல்ல. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு இவற்றுக்கான உரிமைகள். இவற்றை சரியாகப் பெறுபவர்கள் சிறுபான்மையினராக இருக்கும் நிலையை மாற்றி அவர்கள் பெரும்பான்மையினராக ஆகச் செய்வதே நாட்டின், அரசின், அரசியல் கட்சிகளின் கடமை.

The smallest minority on earth is the individual. Those who deny individual rights cannot claim to be defenders of minorities - Ayn Rand

"உலகில் எல்லாரையும் விட சிறுபான்மையானவன் தனிமனிதன் தான். தனிமனிதனுக்கான உரிமைகளை மறுப்பவர்கள் தங்களை சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று ஒருபோதும் அழைத்துக் கொள்ள முடியாது" - அயன் ராண்ட்

10 comments:

Anonymous said...

தலித்துக்களின் பெயரைச் சொல்லி இட ஒதுக்கீடு கேட்கிறார்களே. உலகிலேயே அதிக அளவு இட ஒதுக்கீடான 69%ல் தலித்துக்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவு மற்றவர்களோடு ஒப்பிட்டால் எந்த அளவு உள்ளது?

பெங்களூர் American

அரவிந்தன் நீலகண்டன் said...

கொலைஞர்: அதென்னாயா தனிமனிச உரிமை?
ஈனமான போராசிரியர்: அதாங்கையா 1970களுல கம்பவுண்டர் பட்டம் தந்த பல்கலைக்கழகத்துல படிச்ச பயலுக்க அப்பனே பெத்தமவன் பொணத்த தனது இல்லைன்னு மறுத்தானே அதானுங்கையா நம்ம திராவிட தனிமனிச உரிமை. ஆமா சிறுபான்மை விசயத்துல கோர்ட் ஏதாச்சும் ஏடாகூடமா தீர்ப்பு கொடுத்தா...
கொலைஞர்: புறநானூற்று வீரனா மாறிட வேண்டியதுதான்
ஈனமான போராசிரிய பெருசு: அதென்ன வீரங்க தலைவா?
கொலைஞர்: (கரகரத்த குரலில்) குடமுருட்டி குண்டு வெடித்த போதும் சரி.. ஆரியவந்தேறிக்கும்பல் நட்ட நடு இரவில் வீடேறி கையை பிடித்து இழுத்த போதும் சரி 'ஐயையோ காப்பாத்துங்க" என வலி பொறுக்காமல் அழுதவன் அல்ல இந்த இரக்கப்பணம் (இரக்கம்னா கருணை பணம்னா நிதி அப்படீன்னு யாராச்சும் பேசுனீக ...அப்பிறம் எனக்கு மேலிடத்து ஆட்களையெல்லாம் தெரியும் பிடிச்சு கொடுத்துடுவேன் ஆமா...). ஆட்சி கட்டிலில் ஏறிட வேண்டுமென துடித்து தெருதெருவாக 'நான் புறங்கையைதானே நக்கினேன் எனக்கு கிடைத்த தண்டனை போதாதா' என புலம்பி திரிந்த சிறுமையை அறியாதவன் இந்த சாமானியன். இருப்பது ஒரே உயிர் அது போவது சிறுபான்மையினருக்காக இருக்கட்டும்.
ஈனமான போராசிரிய பெருசு: அதாவது நீங்க என்ன சொல்றீகன்னா,,,,
செல்போன் சிணுங்குகிறது...
கொலைஞர்: யோவ் பொத்துய்யா நம்ம டெல்லி இளவல் அழைக்கிறான்.
ஈனமான போராசிரிய பெருசு: அது ஆருங்க...
கொலைஞர்: அதான்யா திராவிட சமுதாய நலனுக்காக (விம்மிய குரலில்) மிகப்பெரிய தியாகமாக தமிழ்நாட்டில் நுழையபார்த்த அரக்கியான இந்தியையே படித்து இன்று திராவிட தொலைக்காட்சிக்காக கூட்டாட்சியில் கோலோச்சும் என் வமிச இளவல்...
ஈனமான போராசிரிய பெருசு: ஓ அவருங்களா...(கையதுகொண்டு மெய்யதுபொத்தி எந்திச்சு நிக்கிறார்)
டெல்லி இளவல்: இன்னா தாத்தா நீ உன் பொன் விழாவுக்காக குத்தாட்டமெல்லாம் ஏற்படுத்த்தியிருக்கேன், இந்தி பிகருங்களை வைச்சு சூப்பர் ஆட்டம் ஏற்பாடு செஞ்சா நீ அங்க என்ன செஞ்சிட்டு இருக்கே? திரும்பவும் அந்த பெருசு கிட்ட பேச்சா.. அவனுக்கு வைக்கிறெண்டி ஆப்பு...
கொலைஞர்: அவன் ஒரு அறுவை செல்லம். நீ அழைத்தால் நான் வராதிருப்பேனா...குடும்பம் பாசம் பற்று என வளர்ந்தவனடா இந்த சமானியன். இதோ வருகிறேன்.
ஈனமான போராசிரிய பெருசிடம்; அங்கே என் இளவல் ...ஆரிய நங்கைகளை இந்த திராவிட சாமானியன் முன் ஆடவைக்கப்போகிறான். நம் இனமானம் வென்ற நாள் இது. நம் குளியறியா பெரிய தலை நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கும் நாள் இது... உமக்கு தெரியுமா இது சாதாரண ஆட்டம் இல்லை. சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த ஒருவரால் உருவாக்கப்பட்ட அமைப்பினால் நடத்தப்படும் கலைவிழா...(ஈனமானம்: ம்ம்ம்ம் அது பழபாசை ஆர்கனைஸ் பண்ணுனதுல்லா...ரொம்ப கன்ப்யூஸ் பண்றாரு...என்ன செய்ய பெரிய குடும்பம்...)

வஜ்ரா said...

//
The smallest minority on earth is the individual. Those who deny individual rights cannot claim to be defenders of minorities - Ayn Rand

"உலகில் எல்லாரையும் விட சிறுபான்மையானவன் தனிமனிதன் தான். தனிமனிதனுக்கான உரிமைகளை மறுப்பவர்கள் தங்களை சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள் என்று ஒருபோதும் அழைத்துக் கொள்ள முடியாது" - அயன் ராண்ட்
//

பொட்டில் அடித்தார் போல் சொன்னார் ராண்ட்

செத்துப் போகலாம் இவர்கள்.

மாசிலா said...

நடுநிலைமையுடன் எழுதியிருக்கும் இக்கட்டுரையின் கருத்துக்களோடு நான் ஒத்துப்போகிறேன்.

கடைசி இரு பத்திகளும் உண்மையை சரிபட உணர வைக்கின்றன.

இருக்கும் சிறுபான்மை பிரச்சினைகளை ஊதி பெரிதாக்கி அதில் குளிர் காய்வதுதான் அரசியல்வாதிகளின் பொழுதுபோக்கே.

மிகவும் சிக்கலான இப்பிரச்சினைகளை கையாள்வது அரசாங்கத்திற்கு அந்தந்த சமுதாயத்தினருக்கும் மிகவும் கடினமானதொன்றே.

எண்ணற்ற இனங்கள் குலங்கள் மதங்கள் கொண்ட அற்புத பாரதத்தின் மக்கள் ஒற்றுமை குலையாமல் அனைவரும் விட்டுக்கொடுத்தும், சகிப்புத்தன்மையுடனும் நடந்து அமைதி காண வழி தேடுவோம்.

ஜடாயு said...

// உலகிலேயே அதிக அளவு இட ஒதுக்கீடான 69%ல் //

ஆகா என்ன பெருமை தமிழ்நாட்டுக்கு!

// தலித்துக்களின் பெயரைச் சொல்லி இட ஒதுக்கீடு கேட்கிறார்களே //

எங்கே கேட்கிறார்கள்? இப்போது சம்பிரதாயத்துக்கு கூட அப்படி செய்வதில்லை பெ.அமெரிக்கன்! ஓப்பனாக "நாங்கள் முஸ்லீம்கள், இந்த நாட்டு மக்களை ஒரு காலத்தில் ஆட்சி செய்தோம், கொடுமை செய்தோம் . எங்களுக்கு இப்போது இட ஒதுக்கீடு வேண்டும்" - இப்படித் தான் இருக்கு இப்போதைய கோரிக்கைகள்...

தலித்தாவது கிலித்தாவது..

ஜடாயு said...

// ஆரிய நங்கைகளை இந்த திராவிட சாமானியன் முன் ஆடவைக்கப்போகிறான். நம் இனமானம் வென்ற நாள் இது. //
// சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த ஒருவரால் உருவாக்கப்பட்ட அமைப்பினால் நடத்தப்படும் கலைவிழா...( //

ஹா ஹா ஹா!

அரவிந்தன், படித்தேன் சிரித்தேன் சிரித்துக் கொண்டே இருக்கிறேன்.

ஜடாயு said...

// பொட்டில் அடித்தார் போல் சொன்னார் ராண்ட்

செத்துப் போகலாம் இவர்கள். //

வஜ்ரா, அது மானமுள்ளவன் செய்வது. இவர்கள் யோசனை எல்லாம் சாகடிப்பது பற்றி தான்.

ஜடாயு said...

// நடுநிலைமையுடன் எழுதியிருக்கும் இக்கட்டுரையின் கருத்துக்களோடு நான் ஒத்துப்போகிறேன். //

மிக்க நன்றி மாசிலா அவர்களே.

// கடைசி இரு பத்திகளும் உண்மையை சரிபட உணர வைக்கின்றன. //

முந்தைய பத்திகளில் தான் இதற்கு வேண்டிய முக்கியமான பீடிகை உள்ளது.

Anonymous said...

{குடமுருட்டி குண்டு வெடித்த போதும்}

அட, இது என்ன கதை? அந்த காலத்திலேயே தீவிரவாதமா?

{இரக்கப்பணம்}

:-) !

{குளியறியா பெரிய தலை}

விழுந்து விழுந்து சிரிக்கிறேன்

கபீரன்பன் said...

The pride should be in being truly an "Equal opportunity society" and not "all are equal some are more equal". That is hypocrisy. Because in the latter case, the definition keeps changing, twisted and lo totally distorted as happened in our country. No dicrimination on account of caste, race or sex should come in the way for the individual's progress in the society. Your later posting of Bharathiyar's essay has brought this out quite clearly.